ஒயிட் பீல்டு : சிதிலமடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், அதில் துாங்கி கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாயினர். மூன்று பேர் காயம் அடைந்தனர்.
பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே உள்ள ஹுடியில் பி.எல்.ஆர்., எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடம் உள்ளது.
இது பழைய கட்டடம் என்பதால் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. எனவே இடிக்கும் பணிகள் நடக்கிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டடத்தின் முன்பு நேற்று முன்தினம் இரவு படுத்து துாங்கினர்.
அப்போது பலத்த மழை பெய்தது. தொழிலாளர்கள் அனைவரும் கட்டடத்தின் உள்ளே இருந்த அறையில் படுத்து கொண்டனர்.
பலத்த மழையால் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், பீஹாரை சேர்ந்த ஜைனுதீன், 30, ஹரமான், 24 ஆகிய இரண்டு பேர், உடல் நசுங்கி உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement