கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?

Kerala, Pathanamthitta: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் லாட்டரி விற்று வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண் காணாமல் போய்விட்டதாக கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி போலீஸில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். அதையடுத்து அப்பெண்ணின் செல்போன் சிக்னல் கடைசியாக செயலில் இருந்த இடம் குறித்து போலீஸார் விசாரித்து அவ்விடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது நடத்தப்பட்ட போலீஸாரின் விசாரணையில், சீக்கிரம் பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசையில் இரு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதியினர் குறித்த பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.

பத்தினம்திட்டா மாவட்டத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வருபவர்கள் தான் பகவந்த் சிங் மற்றும் லைலா தம்பதியினர். இவர்கள் குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு சமூக வலைதளம் மூலம் முகமது ஷபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இவர்கள் நண்பர்களாக, ஒருகட்டத்தில் தனக்கு அதிசய சக்திகள் கொண்ட ஒருவரை தெரியும் எனவும், அவர் முன் பகவந்த் சிங் மற்றும் லைலா உடலுறவு கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். அப்படி செய்தால் சீக்கிரம் பணக்காரர் ஆகும் வழியை அவர் கூறுவார் எனவும் முகமது ஷபி ஆசையை தூண்டியுள்ளார். இந்த தம்பதிகள் முகமது ஷபியை நேரில் கண்டதில்லை. அதன்பின்னர் தன்னை சாமியார் ஷிகாப் என அவர் தம்பதிகளிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு சந்தித்துள்ளார். இரண்டு பெண்களை நரபலி கொடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தினால் விரைவில் பணக்காரர் ஆகிவிடுவீர்கள் என்று அந்த தம்பதியினரிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய தம்பதியினர், பிரோக்கர் ஒருவரின் உதவியை நாடியுள்ளனர்.

இதையடுத்து, வேலை வாங்கி தருவதாகக்கூறி அந்த பிரோக்கர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த இரு பெண்களை மார்ச் மாதம் ஒரு பெண்ணையும், செப்டம்பர் மாதம் ஒரு பெண்ணையும் அழைத்து வந்து பகவந்த் சிங் – லைலாவிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் சாமியாரின் வழிக்காட்டுதலின்படி திருவல்லாவில் உள்ள தங்களின் வீட்டில் வைத்து அந்த கேரள தம்பதியினர் பெண்களை கொலைசெய்து நரபலி கொடுத்துள்ளனர். அதையடுத்து அவர்களின் உடல்களை தங்களது வீட்டிலேயே புதைத்துள்ளனர்.

இதில் செப்டம்பர் மாதம் அவர்கள் நரபலி கொடுத்த பெண் தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் என கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், பெண்களின் உடல்களை மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி, மற்றும் பிரோக்கர் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து இதுபோன்று முன்னதாக வேறு ஏதும் நரபலி கொடுத்துள்ளனரா என விசாரித்து வருகின்றனர். 

பகவந்த் சிங் வீட்டின் அருகே வசிப்பவர்கள், இவர்கள் இப்படி செய்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர்கள் பல ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது காவல்துறையினர் கொலை செய்த தம்பதிகளையும், அவர்களை தூண்டி குற்றச்சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஷிகாப் என்பவரையும் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் வேறுயாராவது நரபலி கொடுக்கப்பட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்திலும் பணத்தின் மீதான ஆசையால் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

“உண்மையில் மனநிலை சரியில்லாதவர்களால் தான் இப்படி செய்ய முடியும். இது நவீன சமுதாயத்திற்கு சவாலாக உள்ளது. இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இந்த தீமையை எதிர்த்துப் போராட வேண்டும்” என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.