சென்னை: சர்ச்சைக்குரிய மெய்டன் பார்மா நிறுவனம் தயாரித்த இருமல் மருந்துகள் தமிழகத்தில் எங்கும் விற்கப்படவில்லை என மருந்து கட்டுப்பாட்டுத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அந்த மருந்துகள் எங்கும் விற்கப்படாத நிலையில் தொடர்ந்து கள ஆய்வு நடத்தப்படும். காம்பியா நாட்டில் மெய்டன் பார்மா நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து உட்கொண்ட 66 பேர் இறந்த நிலையில் அரசு விளக்கம் அளித்துள்ளது.