`சர்தார்', `பிரின்ஸ்' முதல் 'ஹர ஹர மகாதேவ்' வரை… தீபாவளி ரேஸில் இருக்கும் இந்தியப் படங்கள்!

ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்ற ஆர்வம் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் உண்டு. அந்த வகையில் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் இந்திய படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். 

சர்தார் – தமிழ் : (அக்.21)

சர்தார்

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் நடித்திருக்கும் படம், ‘சர்தார்’. ஆகஸ்ட் மாதம் ‘விருமன்’, செப்டம்பரில் ‘பொன்னியின் செல்வன்’ இப்போது அக்டோபரில் ‘சர்தார்’ மாதம் ஒரு படம் என மாஸ் காட்டுகிறார், கார்த்தி. அப்பா – மகன் என கார்த்தி டபுள் ஆக்‌ஷனில் நடித்திருப்பது இதன் ஸ்பெஷல். ஸ்பை த்ரில்லராக உருவாகி இருக்கிறது.  

பிரின்ஸ் – தமிழ் : (அக்.21)

பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் படம். முதல்முறையாக தீபாவளியை முன்னிட்டு இவரின் படம் வெளியாகிறது. டோலிவுட்டில் ப்ளாக்பஸ்டரான ‘ஜதிரத்னலு’ படத்தை இயக்கிய அனுதீப் இயக்கியிருக்கும் படம் இது. ஜாலியான காமெடி லவ் ஸ்டோரி. வெளிநாட்டு நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தமிழ் – தெலுங்கு பைலிங்குவலாக உருவாகியிருக்கிறது. 

மான்ஸ்டர் – மலையாளம் :  (அக்.21)

மான்ஸ்டர்

மாதம் ஒரு படம் என டாப் கியரில் புயலென இயங்கிக்கொண்டிருக்கிறார், மோகன்லால். `புலி முருகன்’ படத்தின் இயக்குநர் வைஷாக் இயக்கியிருக்கும் படம் இது. த்ரில்லர் ஜானரில் உருவாகும் இதில் லக்கி சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், மோகன்லால். 

படவெட்டு – மலையாளம் : (அக்.21)

படவெட்டு

நிவின் பாலி, அதிதி பாலன், மீரா ஜாஸ்மின், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடித்திருக்கும் படம், ‘படவெட்டு’. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். 

ஒரி தேவுடா – தெலுங்கு : (அக்.21)

ஒரி தேவுடா

தமிழில் சூப்பர் ஹிட்டான ‘ஓ மை கடவுளே’ படத்தின் தெலுங்கு ரீமேக் இது. தமிழில் இயக்கிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துதான்  இந்தப் படத்தையும் இயக்கி இருக்கிறார். விஷ்வாக் சென், மிதிலா பால்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி நடித்த கேமியோ ரோலில் வெங்கடேஷ் நடித்திருக்கிறார். 

ராம் சேது – இந்தி : (அக்.25)

ராம் சேது

இயக்குநர் அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்திருக்கும் படம் இது. ஜாக்குலின் பெர்ணான்டஸ், தெலுங்கு நடிகர் சத்யதேவ், நாசர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அகழ்வாராய்ச்சி நிபுணராக வரும் அக்‌ஷய், ராமர் பாலம் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் ஒரு அட்வெஞ்சர் படமாக உருவாகி இருக்கிறது. 

தேங்க் காட் – இந்தி : (அக்.24)

அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்திருக்கும் ஃபேன்டஸி காமெடி படமே இந்த ‘தேங்க் காட்’. 

ஹர ஹர மகாதேவ் – மராத்தி : (அக்.25)

ஹர ஹர மகாதேவ்

சத்ரபதி சிவாஜியுடன் இருந்த பல வீரர்களில் பாஜி பிரபு தேஷ்பாண்டே முக்கியமானவர். அவரைப் பற்றிய படம்தான் இந்த ‘ஹர் ஹர் மகாதேவ்’. மராத்தியில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.