ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் இவர்கள் தான்- சி.வி.சண்முகம் பகீர்..!

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் அதிமுக தொடங்கப்பட்டு 51 வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் சி வி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம்:- திமுகவை சார்ந்த கருணாநிதியை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என தொடங்கப்பட்ட கட்சி அதிமுக.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்னும் சில நாட்கள் வாழ்ந்திருப்பார். அவர் இறப்பதற்காக காரணமாக இருந்த ஸ்டாலின், கருணநிதி, திமுகவுடன் நேரிடையாக உறவு வைத்து கொண்டு அதிமுக கர வேட்டியை கட்டி கொண்டு, தான் அதிமுக என பன்னீர் செல்வம் கூறி கொள்வதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் அதிமுகவை எதிர்த்து நிற்பவர்களும், அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் எல்லோரும் அனாதையாக தான் போவார்கள் என்றும், பன்னீர்செல்வத்தோடு இருப்பவர்களை நிழல் கூட நம்பாது என தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் கடுமையாக கூறினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 16 மாதங்களில் மக்களிடம் மிக பெரிய எதிர்பினை பெற்ற அரசாக திமுக உள்ளதாகவும், எப்போது இந்த ஆட்சியை தூக்கி எறியலாம் என மக்கள் தயாராக உள்ளதாக கூறினார். திமுக ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யும் அராஜகங்களை மக்களிடத்தில் எடுத்துரைத்து, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மிக பெரிய தோல்வியை கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.