திருப்பதியில் ரூ. 12 கோடியில் பயோ காஸ் ஆலை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் திருமலையில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை கொண்டு பயோ காஸ் தயாரிக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஐஓசிஎல்) நிறுவனத்துடன்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தூய்மை திருமலையின் ஒரு பகுதியாக திருமலையில் 2 ஏக்கர் பரப்பளவில் தேவஸ்தானம் சார்பில் ரூ. 6 கோடி மற்றும் ஐஓசிஐஎல் சார்பில் ரூ. 6 கோடி முதலீட்டில் மொத்தம் ரூ. 12 கோடியில் பயோ காஸ் ஆலை அமைக்கப்படும்.  இதற்காக தினமும் 35 டன் கழிவுகள் பயன்படுத்தப்பட உள்ளது. திருமலைக்கு ஒரு நாளைக்கு 3.5 முதல் 4.5 மெட்ரிக் டன் எரிவாயு தேவை உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.