டெல்லி: நாட்டின் பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 7.41%ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்டில் 7%ஆக இருந்த பணவீக்க விகிதம் செப்டம்பரில் 0.41% உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் பட்ஜெட் இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் மிகப் பெரும் பிரச்சனைகளில் கச்சா எண்ணெய் விலை முக்கியமானது எனவும் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் தடுக்கவே பெட்ரோல், டீசல் மீதான வரியை அரசு குறைத்துள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
