சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அன்னை சத்யா நகர் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக பள்ளிகரணை விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் கிருஷ்ண குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அடிப்படை அமைத்த போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் தொழில் நடந்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அப்பாவி பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில் ஈடுபடுத்திய இடைத்தரகர்களான வினோத் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பாலியல் தொழில் ஈடுபடுத்திய 3 இளம் பெண்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தம்பி உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.