மீனாட்சியம்மன் கோயில் இணையதளம் திடீர் முடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதளம் திடீரென முடங்கியதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வமான www.meenakshitemple.org இணையதளம் நேற்று முன்தினம் இரவு திடீரென முடங்கியது. கோயில் திருவிழா, கோயிலின் வரலாறு, கோயிலின் சிறப்பு, சிறப்பு கட்டணம் மற்றும் ஆன்லைன் மூலம் பிரசாதம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள், தகவல்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோயில் இணையதளம் முடங்கியது. இன்று (நேற்று) இணையதளம் சரி செய்யப்பட்டது’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.