பெங்களூரு : ”தற்போது, ௫ ஜி அலைவரிசை பெயரில் சைபர் மோசடி நடப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என குற்றப்பிரிவு டி.சி.பி., சரணப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
நாட்டில், ‘4 ஜி’ அலைவரிசையில் இருந்து 5 ஜி அலைவரிசைக்கு மாற்றுவதாக கூறி சிலர், வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களை கேட்டு பெறுவதாக புகார்கள் வந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுபவர்கள், அவர்களிடம் இருந்து ஓ.டி.பி., நம்பர்களை பெற்று, வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து கொள்வர்.
‘ஏர்டெல், ஜியோ’ போன்ற மொபைல் நிறுவனங்களின் பெயரில் மோசடி ஆசாமிகள் போன் செய்வது கவனத்துக்கு வந்துள்ளது.
இதுபோன்று பேசுபவர்களிடம் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மொபைல் அலைவரிசை குறித்து யாராவது போன் செய்தால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை 112க்கு போன் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement