இந்தியாவில் புதிதாக 2 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 2 ஆயிரத்து 786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை இன்று (13) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 இலட்சத்து 21 ஆயிரத்து 319 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 557 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 40 இலட்சத்து 65 ஆயிரத்து 963 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 26 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் மேலும் 12 பேர் இறந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 847 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.