உனா: இமாச்சலப்பிரதேசம் – உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அம்ப் அந்தவுரா ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ரயில் இயக்கம் – 5 மணி 20 நிமிடங்களில் 412 கி.மீ. தூரத்தை இந்த ரயில் சென்றடையும். மிகவும் இலகுவான, அதிநவீன வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டது. வந்தே பாரத் ரயில் சேவை நிகழ்வில் இமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.