காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் சேர்ந்து வேல்முருகனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதி நரிக்குறவர் சமூகத்தை வேல்முருகன். இவர் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்து இருந்த நிலையில் அவருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த வேல்முருகன் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் அருகே வடக்கு கோட்டை சாலையில் அமைந்து இருக்கும் மாற்றுமுறை குறைதீர் மன்ற கட்டிடம் அருகே நேற்று தீக்குளித்தார்.
இந்த நிலையில் வேல்முருகனின் குடும்பத்தினர் மற்றும் மலைக்குறவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நபர்கள் எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை வேல்முருகனின் உடலை வாங்கப் போவதில்லை என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவரை முன்னர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் இரண்டு அம்ச கோரிக்கைகளாக 1. மலைக்குறவர் பழங்குடியின மக்களுக்கு ( Scheduled Tribes ) பிரிவில் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். 2)இறந்த வேல்முருகன் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் 50 லட்சம் நிதி உதவி இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை மதியம் ஒரு மணி அளவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை மற்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருநாகராஜன் ஆகியோர் ஒரே நேரத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.