திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடக்கும்! முதல்கட்ட பணிகளை தொடங்கியது ஆர்எஸ்எஸ்!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்காக பாதுகாப்பு கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து உத்தரவிட்ட நீதிபதிகள் நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கும் வகையில் மனுக்களின் மீது முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதனை எடுத்து நாடு முழுவதும் பி.எப்.ஐ அமைப்பு சார்ந்தவர்களின் கைது மற்றும் அந்த அமைப்பின் தடையின் காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் விடுதலை சிறுத்தைகள் சார்பாக அதே நாளில் மத நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என அரசிடம் அனுமதி கூறியிருந்தனர். இதன் காரணமாக இரு பேரணிகளும் அனுமதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நவம்பர் 6ஆம் தேதி பேரணி நடத்துவதற்கும் அதற்கான அனுமதியை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் சார்பாக நேற்று முன்தினம் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய திருமாவளவன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் எனவும், இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆர்எஸ்எஸ் தரப்பு கூறுகையில் யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்லை . எங்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே திட்டமிடப்படி அணிவகுப்பு நடைபெறும் என கூறியுள்ளனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் 51 இடங்களில் அணிவிப்பு நடத்த திட்டமிட்ட இடங்களில் அணிவகுப்பு செல்லும் பாதை, கடக்க வேண்டிய நேரம் ஆகியவற்றை பார்வையிட்டு முதல் கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.