நிர்வாண பூஜையும், நரபலி விருந்தும்; சைக்கோ ஷபியை சிக்க வைத்த செல்போன்!

கேரளாவை உலுக்கிய நரபலி வழக்கில் புதிய புதிய தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பணக்காரராக வேண்டும் என்ற ஆசைப்பட்ட தம்பதியை வைத்து இரண்டு பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்துள்ளார் சைக்கோ ஆசாமியும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவருமான ஷபி. இவர் மாந்திரீகம் பார்த்து வந்துள்ளார். கிட்டதட்ட மந்திரவாதி ரேஞ்சுக்கு மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தவர்.

ஷபி பின்னணி குறித்து போலீசார் தெரிவித்த தகவல்கள் பலரையும் பதற வைத்து வருகிறது. கேரளாவில் மூதாட்டி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வன்கொடுமை முயற்சி செய்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மற்றவர்களை துன்புறுத்தி அதைப் பார்த்து ரசிக்கும் சைக்கோ என்றும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு ஒன்றில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த சூழலில் தான் சமூக வலைதளங்கள் மூலம் பகவல் சிங், லைலா தம்பதியின் பதிவை பார்த்துள்ளார். அதில் விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களது வீட்டிற்கு சென்று ஷபி பேசி, நரபலி செய்தால் பலன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதற்கான ஏற்பாடுகளை தானே செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தான் லாட்டரி சீட்டு விற்று வந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களை தேர்வு செய்துள்ளார். ஒவ்வொருவராக அழைத்து வந்து வேலையை முடித்துள்ளனர். அதாவது, ஆபாச படத்தில் நடித்தால் பல லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பகவல் சிங் வீட்டிற்கு ஷபி அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அந்த பெண்களை நிர்வாணப்படுத்தி கை, கால்களை கட்டியுள்ளனர். இதையடுத்து அவர்களது மார்பகத்தை அறுத்து எடுத்துள்ளனர். பின்னர் கழுத்தை அறுத்து எடுத்து விட்டு உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். அதில் சில பாகங்களை சமைத்து சாப்பிட்டால் எப்போதும் இளமையாக இருக்கலாம் என்று ஷபி கூறியுள்ளார். மேலும் நிர்வாண பூஜை செய்யும்படியும் அதற்கான ஏற்பாடுகளையும் ஷபி செய்திருக்கிறார்.

ஒருவழியாக இருவரையும் நரபலி கொடுத்து விட்டு எஞ்சிய பாகங்களை வீட்டிற்கு அருகில் புதைத்துள்ளனர். இதில் பத்மாவின் செல்போன் ஷபியிடம் இருந்துள்ளது. பத்மா காணாமல் போன புகாரை போலீசார் விசாரித்து வந்த நிலையில் செல்போன் சிக்னல் கொடுத்துள்ளது. அதை வைத்து ஷபியை பிடித்து விசாரித்துள்ளனர். அதன்பின்னர் தான் நரபலி விவகாரம் வெளியுலகிற்கு தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.