வெந்து தணிந்தது காடு.. OTT-ல் வணக்கத்த போடு.. ரசிகர்கள் குதூகலம்!

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு சிம்பு – கவுதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்துக்காக இணைந்தது.

சித்தி இத்தானி, ராதிகா, நீரஜ் மாதவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ உள்ளிட்ட அனைத்து பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டியெங்கும் பரவி ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும், வர்த்த ரீதியாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு நல்ல வசூலையே பெற்றிருக்கிறது. இதனால் குஷியான தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கவுதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கும், சிம்புக்கு சொகுசு கார் ஒன்றையும் பரிசாக அளித்திருந்தார்.

இதுபோக ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் டைட்டிலை வைத்து பல மாதமாக ஒற்றையாளாக போகும் இடமெல்லாம் விளம்பரம் செய்து வந்த நடிகர் கூல் சுரேஷுக்கும் ஐசரி கணேஷ் ஆப்பிள் ஐஃபோனை பரிசளித்திருந்தார்.

இப்படி இருக்கையில் வெந்து தணிந்தது காடு படத்தை தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படலாம் என தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதன்படி, பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் இன்று (அக்.,13) சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இதனையறிந்த ரசிகர்கள் குதூகலமாகியிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.