வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஷாஜஹான்பூர்: உத்தர பிரதேசத்தில், நெடுஞ்சாலை திட்டத்துக்காக ஹனுமன் கோவிலை இடம் மாற்ற, முஸ்லிம் ஒருவர் தன் நிலத்தை தானமாக அளித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில், புதுடில்லி – லக்னோ இடையே தேசிய நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலை, ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் கச்சியானி கேரா கிராமத்தின் வழியாக செல்கிறது. ஆனால், சாலை அமைக்கப்படும் இடத்தில் ஒரு ஹனுமன் கோவில் அமைந்துள்ளது.

இதனால், ஹனுமன் கோவிலை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த, அக்கிராமத்தைச் சேர்ந்த பாபு அலி என்ற முஸ்லிம், சாலையிலிருந்து சற்று தள்ளி உள்ள தன் நிலத்தில் கோவிலை இடம் மாற்றிக் கொள்ள மாவட்ட நிர்வாகத்திடம் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, பாபு அலிக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில், ஹனுமன் கோவில் மாற்றப்பட உள்ளது.
இந்நிலையில், ”பாபு அலி ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கிறார்,” என, மாவட்ட துணை கலெக்டர் ராசி கிருஷ்ணா அவரை புகழ்ந்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement