KFC அனுப்பிய வேகாத சிக்கன்; ஸ்விகியில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு  வந்தவுடன் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அதில், சிக்கன் வேகாமல்  இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்த நிலையில் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சம்பவம் பற்றி பதிவிட்டு SWIGGY நிறுவனம்,KFC நிறுவனம் மற்றும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) ஆகியவற்றை tag செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஸ்விகி மற்றும் Kfc நிறுவனங்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்வதாக உறுத்தியளித்தனர். உணவகத்தில் சமைக்காத சிக்கனை வாடிக்கையாளருக்கு வழங்கபட்ட சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்தனர். 

அப்படி ஆய்வு செய்தபோது, சேகர் என்பவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் மட்டுமே வேகாத நிலையில் வழங்கப்பட்டதாக கூறினர். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை வீடியோவாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் மட்டுமே தீர்வு கிடைப்பதாகவும், புகார் அளித்தால் எந்த தீரும் கிடைப்பதில்லை எனவும்  KFC உணவு வாங்கிய வாடிக்கையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.