Rocket Attack: திடீரென தாக்கிய ராக்கெட்டுகள்; பாராளுமன்றம் அருகே ஒரே அழுகுரல்!

ஈராக் வடக்கு பகுதியில் இருக்கும் பல்வேறு நகரங்கள் குர்திஸ்தான் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் பிகேகே எனப்படுகிற குா்திஸ்தான் தொழிலாளா் கட்சியை அண்டை நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

மேலும் அவர்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியிலுள்ள குர்திஸ் பிராந்தியமான அசோஸ் பிராந்தியத்துக்குள் கடந்த வாரம் துருக்கி போர் விமானங்கள் நுழைந்து வான் தாக்குதலில் ஈடுபட்டன.

இந்நிலையில் நேற்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆளுநர் ரவி க்ரீன் சிக்னல்?; சசிகலா வட்டாரம் செம ஹேப்பி!

இதையடுத்து வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது மற்றொரு வெடிகுண்டு வெடித்ததில், 3 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரி காயம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்தச் சூழலில் இன்று ஈராக் தலைநகர், பாக்தாத்தின் பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக, பகீர் தகவல்கள் வெளியாகி ஈராக்கையே நிலைகுலைய செய்துள்ளது.

பாக்தாத் நகரை சுற்றிலும் மொத்தம் 9 ராக்கெட்டு மூலம், சக்தி வாய்ந்த குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பொதுமக்களில் பலர் காயமடைந்து உள்ளதாகவும் ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிக்கி தவிக்கும் தமிழிசை; பாஜக பிரமுகரால் வந்த வினை!

ஆனாலும் இந்த தாக்குதலில் இதுவரை எத்தனை பேர் காயம் அடைந்தனர்? என்ற துல்லியமான விவரங்களை ஈராக் ராணுவம் அளிக்கவில்லை. பாக்தாத்தில் உள்ள பசுமை மண்டல பகுதியில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன.

புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக ஈராக் பாராளுமன்றம் கூடுவதற்கு இருந்த சில நிமிடங்களுக்கு முன்பாக, இந்த பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பாராளுமன்ற கூட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவே பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ஈராக்கில் பாராளுமன்றத்தை குறிவைத்து, தாக்குதல் நடத்தப்படுவது இது, முதல் முறை இல்லை என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் தான் தேசத்தந்தை; புகழ்ந்த முஸ்லிம் மதகுரு.. கிடைத்த பரிசு!

கடந்த மாதத்தில்கூட பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வருவதாக இருந்த சில நிமிடத்திற்கு முன்பாக, ராக்கெட்கள் தாக்குதல் நடத்தப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.