இரை உண்ட மயக்கம்! நள்ளிரவில் வீட்டிற்குள் ஹாயாக படுத்துக்கிடந்த 12 அடி நீள மலைப்பாம்பு!

திண்டுக்கல் கொடைரோடு அருகே 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஏ.புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் தனது வீட்டில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரையினை விழுங்கி இருந்ததால் மலைப்பாம்பு அசையாமல் படுத்து கிடந்தது.
image
தகவல் அறிந்து வந்த நிலக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர. சிறுமலை பகுதியில் இருந்து இரை தேடி ஊருக்குள் மலைப்பாம்பு புகுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
image
மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.