மாஸ்கோ: உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் ஆதரவு அளித்தன ம் என ரஷ்ய அதிபர் விளாடி மிர் புடின் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்க ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார் அதிபர் புடின்.
இந்நிலையில் இன்று கஜகஸ்தான் சென்றிருந்த புடின் அஸ்தானாவில் அளித்த பேட்டி, உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண வேண்டும் என இந்தியாவும், சீனாவும் வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளுமே எங்களின் நட்புறவு நாடுகள். அவர்களின் நிலைப்பாட்டை நன்கு உணர்ந்துள்ளேன்.
இதில் உக்ரைனின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டியது அவசியம். எனவே இந்த விவகாரத்தில் அமைதி பேச்சுவர்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் தனது ஆதரவை அளித்தன . அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை . இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement