சினிமாவுக்கு வந்த மற்றுமொரு வாரிசு நடிகை

முன்னாள் ஹீரோயின்களின் வாரிசுகள் நடிக்க வருவது அதிகரித்துள்ளது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, மேனகா மகள் கீர்த்தி, லிஸி மகள் கல்யாணி, சரிகா மகள் ஸ்ருதிஹாசன், ஜீவிதா ஷிவானி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வரிசையில் அடுத்து வருகிறார். பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீயின் மகள் அவந்திகா தசானி.

பெல்லம்கொண்டா கணேஷின் இரண்டாவது படமான 'நேனு ஸ்டூடன்ட் சார்' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். இதில் அவர் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இந்த படத்தை ராக்கி உப்பலபதி இயக்குகிறார். கதையை எழுத்தாளரும் இயக்குனருமான கிருஷ்ண சைதன்யா எழுதியுள்ளார். மஹதி ஸ்வர சாகர் படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை கவனிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.