தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமணமான 2 மாதத்தில் விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கீழப்புனவாசல் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் ஜான்சைமன் (35). இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், வேலையை முடித்துவிட்டு, திருவையாறில் இருந்து அரியலூர் சாலையில் புவனவாசல் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் ஜான்மைசன் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது சாலையில் காயவைக்கப்பட்டிருந்த நெல் குவியல் மீது டயர் உரசியத்தில், நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து திருவையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.