பிக்பாஸ் தமிழ் 6 சீசன்: பிக்பாஸ் தமிழ் 5 சீசன்களைக் கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் குறிவைத்து தூக்கியதற்கு மிக முக்கிய காரணம். இந்நிலையில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள பிக்பாஸ் ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர். அதன்படி இந்த போட்டியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆயிஷா தன்னுடைய துணை இயக்குனர்கள் குறித்து மிகவும் மோசமாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி வெகுவாக வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறியதாவது., சீரியல் படப்பிடிப்பின் பொழுது ஆயிஷா தூங்கிக் கொண்டிருந்தால் அவரை எழுப்ப வரும் துணை இயக்குனர்களை அடிப்பாராம் காலால் எட்டி உதைப்பாராம் இதனால் பல துணை இயக்குனர்கள் அவரை தூக்கத்தில் இருந்து எழுப்ப பயப்படுவார்கள் என மிகவும் தெனாவட்டாக பேசியுள்ளார். இவர் இவ்வாறு கூறியது ரசிகர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே ஆயிஷா ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருவதால் இவர் நீண்ட நாள் நீடித்து இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.