தொடரும் மனஸ்தாபம்… விஜய் தகப்பனாருக்கா இந்த நிலைமை?… வைரலாகும் புகைப்படம்

கோலிவுட் வசூல் மன்னர்களில் ஒருவர் விஜய். தற்போது மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்னுடன் வைத்திருக்கும் விஜய்க்கு, அவருடைய ஆரம்பகாலத்தில் துணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.  விஜய்யை நடிகராக அறிமுகம் செய்து அவருக்காக பல படங்களை இயக்கி, மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்டு தேர்வு செய்வது என முழுதாக அவருடனேயே இருந்தார். இதனையடுத்து விஜய்யும் தனது திறமையை திறம்பட வெளிக்காட்ட ஏகப்பட்ட படங்கள் ஹிட்டடித்தன.

அதனைத் தொடர்ந்து படிப்படியாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் மனஸ்தாபம் நீடிப்பதாக இடை இடையே தகவல்களும் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும்விதமாக; தன் பெயரை பயன்படுத்தி கூட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் தாய், தந்தை மீது வழக்கும் தொடர்ந்தார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில் அவரது மனைவி ஷோபா கணவருக்கு கேக் ஊட்டும் புகைப்படங்கள் வெளியாகின. அதில் விஜய் கலந்துகொள்ளாதது அப்போது விவாதமாக ஆக்கப்பட்டது. ஆனால் அது அவர்களின் குடும்ப விவகாரம் இதில் தேவையில்லாமல் எதற்கு மற்றவர்கள் தலையிட வேண்டுமென விஜய் ரசிகர்கள் கூறிவந்தனர். 

இந்தச் சூழலில் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், “நானும் விஜய்யும் பேசாமல் இருப்பது உண்மைதான். அதை நான் எப்போதுமே மறைத்ததில்லை. ஒருகட்டம்வரைதான் பிள்ளைகள் நமது பேச்சை கேட்பார்கள். பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களுடைய ஆட்டிட்யூட் மாறிவிடும். இது அனைவரது வீட்டிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அப்படி இருக்கும் சூழ்நிலையில் நான் கூறும் சில விஷயங்கள் அவருக்கு பிடிக்காததால் தற்சமயம் இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை” என்றார். இதனால் விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் இன்னமும் மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.

Chandrasekar

இந்நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது இமயமலை, ஹரித்வார் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது அவர் ரிக்‌ஷா ஓட்டும்படி எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும், விஜய்யுடன் பேசாமல் இருப்பதால் எஸ்.ஏ.சி விரக்தியில் இருக்கிறார். எனவே மன அமைதி தேடித்தான் அவர் ஆன்மீக சுற்றுலாவுக்கு செல்கிறார் என ஒரு தரப்பினரும், அவர் ஆன்மீக சுற்றுலா செல்வது வழக்கமான ஒன்றுதான் என மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். இருப்பினும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரின் தந்தைக்கு இப்படிப்பட்ட நிலை வந்திருக்கக்கூடாது எனவும் நெட்டிசன்ஸ் கூறிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.