பும்ராவுக்கு மாற்று வீரர் இவர்தான்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக விலகியதையடுத்து, அவருக்கு மாற்று வீரராக முகமது ஷமியை தேர்வு செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடக்கிறது. இதில், நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23-ம் தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதையடுத்து, உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சென்றது. அங்கு, வீரர்கள் தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால், பும்ராவுக்கு பதிலாக அணியில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

இந்த நிலையில், பும்ராவுக்கு மாற்று வீரராக இந்திய அணியில் முகமது ஷமியை தேர்வு செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது. பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக ஷமி இந்திய அணியுடன் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் (பேக்அப்) பிளேயர்களாக விரைவில் ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.