பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுகாதார பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்-துணை இயக்குநர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் விளையாட்டு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை கடந்த 1922ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மக்கள் சேவையில் வெற்றிகரமாக 100 ஆண்டுகளை பொது சுகாதாரத்துறை தொட்டிருக்கிறது. அதையொட்டி, நூற்றாண்டு விழா தற்போது மாநிலம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கடந்த 10ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நூற்றாண்டு விழா ேஜாதி, அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் நேற்று விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில், சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதனை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

ஓட்டம், கோ-கோ, கோணிப்பை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விழிப்புணர்வு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், இப்போட்டிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளன.
அதனை தொடர்ந்து, வரும் 17ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுககு கலெக்டர் பா.முருகேஷ் பரிசுகள் வழங்க உள்
ளார். மேலும், அன்று திருவண்ணாமலைக்கு வருகை தரும் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா ஜோதிக்கு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.