சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட மாணவி சத்யாவின் உடல் அவரது இல்லத்து கொண்டு வரப்பட்டது. தற்கொலை செய்த தந்தை மாணிக்கம் உடலும் ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்புக்கு கொண்டு வரப்பட்டது. மாணவி சத்யா, அவரது தந்தை மாணிக்கம் உடலுக்கு உறவினர்கள் மற்றும் காவலர் குடியிருப்பில் வசிப்போர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.