ஐ.ஐ.டி.,யை நிறுவ உலக நாடுகள் விருப்பம்| Dinamalar

புதுடில்லி :நம் நாட்டின் ஐ.ஐ.டி., எனப்படும், உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை, தங்கள் நாடுகளில் அமைக்க உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் விரும்புகின்றன,” என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

நாடு முழுதும் உள்ள 23 ஐ.ஐ.டி.,க்கள் இணைந்து புதுடில்லி ஐ.ஐ.டி.,யில் இரண்டு நாள் ஆராய்ச்சி கண்காட்சி நடத்துகின்றன. அதை துவக்கி வைத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

இந்திய தொழில்நுட்ப கல்வி மையங்கள் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. உலகின் பல்வேறு வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் தங்கள் நாடுகளில், இந்திய தொழில் நுட்ப கல்வி மையங்களை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

நம் நாட்டின் ஐ.ஐ.டி.,க்கள் உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வி நிலையங்களாக உருவெடுத்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.