புதுடில்லி:கழிவுநீர் மற்றும் திடக்கழிவு பராமரிப்பில் அலட்சியமாக இருப்பதாக கூறி கர்நாடக அரசுக்கு 2,900 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களில் சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. கர்நாடக மாநில சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ்குமார் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி பிறப்பித்த உத்தரவு:
கர்நாடகாவில் கழிவு நீர் மற்றும் திடக்கழிவு பராமரிப்பில் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருகிறது. இதனால், மாநில அரசுக்கு 2,900 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
மாநில தலைமைச் செயலர் கட்டுப்பாட்டில் இருக்கும் விதமாக தனியாக ஒரு வங்கிக் கணக்கு துவக்கி, அதில் அபராதத் தொகை ‘டிபாசிட்’ செய்யப்பட வேண்டும். அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த தொகையை பயன்படுத்தி சுற்றுச்சூழலை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement