ஜி.பி. முத்து செம ஸ்மார்ட் – வனிதா புகழாரம்

பிக் பாஸ் ஆறாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி, சீரியல் நடிகர் அஸீம், நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், ஐஸ்வர்யாவின் அண்ணன் மணிகண்ட ராஜேஷ், நடிகை ரச்சிதா, ஜிபி முத்து, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் என 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

கடந்த ஒருவாரமாக சண்டைக்கும், சந்தோஷத்திற்கும் பஞ்சம் இல்லாமல் பிக்பாஸ் வீடு இருக்கிறது. ஜி.பி. முத்து vs தனலட்சுமி, மகேஸ்வரி vs மணிகண்டன், மகேஸ்வரி vs சாந்தி, ஜனனி vs தனலட்சுமி என முதல் வாரமே போட்டியாளர்கள் கன்டெண்ட் கொடுக்க தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக பிக் பாஸ் 6ல் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஜி.பி முத்து. இதனால் ஜி.பி முத்து ஆர்மி பெருகியுள்ளது. 

இந்நிலையில் ஜிபி முத்து குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் வனிதா விஜயகுமார், “ஜி.பி. முத்து வெகுளிதான் ஆனால் அறிவாளி. எப்போதுமே ஒரு காமெடியன் அனைவரையும் சிரிக்க வைக்கவே நினைப்பார். உயிரை கொடுத்து அதை அவர் செய்வார். ஜிபி முத்துவும் மக்களை எண்டர்டெயின் செய்ய நினைக்கிறார். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் இவ்வளவு தூரம் தனது முயற்சியால் இந்த இடத்தை அவர் அடைந்திருக்கிறார்.

 

தனக்கென தனி  ரசிகர்களையும் அவர் உருவாக்கிக்கொண்டார். கண்டிப்பாக ஜி.பி முத்து அறிவாளிதான். அதேசமயம், அவரின் வெகுளித்தனத்தை மற்ற போட்டியாளர்கள் பயன்படுத்திக் கொண்டால் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என கூறியுள்ளார். இன்று பிக்பாஸ் 6ல் முதல் எலிமினேஷன் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.