தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. பண்டிகை காலங்களில் பெண்கள் தங்களுக்காக நகைகளை எடுத்துக் கொள்வார்கள். தமிழகத்தில் உள்ள பெண்கள் தான் அதிகம் தங்கம் வைத்துள்ளார்கள். அவர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று சரிவைக் கண்டுள்ளது. அந்த வகையில் நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 4,735 க்கும் சவரன் ஒன்றிற்கு ரூ. 37,880 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், இன்று சென்னையில் கிராம் ஒன்றிற்கு ரூ. 45 குறைந்து 4,690 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ. 360 குறைந்து 37,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி கிராம் ஒன்றிற்கு 1.80 காசுகள் குறைந்து, 60.50 ரூபாயாகவும், கிலோ ஒன்றிற்கு 1800 குறைந்து 60,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.