ஹாரி பாட்டர் பிரபல நடிகர் ராபி கோல்ட்ரேன் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!


ஹாரி பாட்டரில்  “ஹாக்ரிட்” என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் உறவினர்களால் தெரிவிக்கப்படவில்லை.

பிரபலமான ஹாரி பாட்டர் திரைப்படத்தின் ஹாக்ரிட் ஆக நடத்த நடிகர் ராபி கோல்ட்ரேன் தனது 72 வது வயதில் உயிரிழந்துள்ளார்.

பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஹாரி பாட்டரில் ஹாக்வர்ட்ஸ் கேம் கீப்பர் “ஹாக்ரிட்” (Hagrid) என்ற கதாபாத்திரத்தில் நடித்து, உலகம் முழுவதும் அறியப்பட்ட ஸ்காட்டிஷ் நட்சத்திரம் ராபி கோல்ட்ரேன் (Robbie Coltrane) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஹாரி பாட்டர் பிரபல நடிகர் ராபி கோல்ட்ரேன் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Robbie Coltrane Harry Potter Hagrid Actor Has DiedImage: Warner Bros

இவர்  ஹாக்வர்ட்ஸ் கேம் கீப்பர் ஹாக்ரிட் மற்றும் 1990 களின் தொலைக்காட்சி குற்ற நாடகத்தில் குற்றவியல் உளவியலாளர் டாக்டர் எடி ‘ஃபிட்ஸ்’ ஃபிட்ஸ்ஜெரால்ட் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் கோல்ட்ரேன் அறியப்பட்டார்.

ராபி கோல்ட்ரேன், கிராக்கரில் தனது பாத்திரத்திற்காக பிரிட்டிஷ் அகாடமி தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

ராபி கோல்ட்ரேனின் மரணம் குறித்து எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் கோல்ட்ரேனின் குடும்பத்தினர் லார்பர்ட்டில் உள்ள ஃபோர்த் வேலி ராயல் மருத்துவமனையில் உள்ள மருத்துவ குழுவினரின் கவனிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஹாரி பாட்டர் பிரபல நடிகர் ராபி கோல்ட்ரேன் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Robbie Coltrane Harry Potter Hagrid Actor Has Died

இதையடுத்து அவரது முகவர் Belinda Wright வெளியிட்ட அறிக்கையில்,   ராபி கோல்ட்ரேன் ஹாக்ரிட் என்ற பெயரில் சிறப்பாக நினைவுகூரப்படுவார் என்று தெரிவித்தார்.

அத்துடன் அந்தோனி ராபர்ட் மெக்மில்லனின் என்று ராபி கோல்ட்ரேனின் உண்மையான பெயரை குறிப்பிட்டு, அற்புதமான மனிதர் மற்றும் தடயவியல் புத்திசாலி என்று விவரித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் போரில் ரகசியமாக நுழைந்த ஈரானிய துருப்புகள்: புடினின் பயங்கர சதித்திட்டம்

ராபி கோல்ட்ரேன் மறைவிற்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் மற்றும் உலக ரசிகர்கள் என பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஹாரி பாட்டர் பிரபல நடிகர் ராபி கோல்ட்ரேன் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Robbie Coltrane Harry Potter Hagrid Actor Has Died



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.