சென்னை: 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.