பட்டினி குறியீடு: நேபாளம், பாகிஸ்தானைவிட பின்தங்கிய இந்தியா!

உலக அளவிலான பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு பட்டியலில் இந்தியா, தனது அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்காளதேஷை விட பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக ‘குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்’ ( Global Hunger Index in 2022) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டினிக் குறியீட்டின் அளவுகோல் என்ன?
உலக அளவில் இருக்கும் பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றைக் கொண்டு, `உலக பட்டினிக் குறியீடு பட்டியல்’ ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவருகிறது.
* அயர்லாந்தைச் சேர்ந்த `கன்சர்ன் வேல்ர்ட்வைட்’ அமைப்பும் (Concern Worldwide), ஜெர்மனியைச் சேர்ந்த `வெல்ட் ஹங்கர் ஹில்ஃப்’ அமைப்பும் (Welt hunger hilfe) இணைந்து, ‘குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்’ என்கிற தலைப்பில் உலக நாடுகளின் பட்டினி குறித்த ஓர் அறிக்கையைத் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றன.
* 5 வயதுக்குக்கீழ் இருக்கும் குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருப்பது,
* உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் உயிரிழப்பு,
* ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது.
இலங்கையைவிட பின்தங்கிய இந்திய நிலை
* இந்த நிலையில், 121 நாடுகள் அடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் இந்தியா 107-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
* அதே சமயம் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 81 வது இடத்திலும், பாகிஸ்தான் 99, இலங்கை 64 மற்றும் பங்காளதேஷ் 84 வது இடத்திலும் உள்ளது.
* கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது.
இந்த பட்டியலில் 121 வது இடத்தில், அதாவது மிக கடைசி இடத்தில் ஏமன் உள்ளது. சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்த நாடுகளின் பட்டினிக் குறியீடு 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடிக்கு ப. சிதம்பரம் கேள்வி

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், உலக பட்டினிக் குறியீடு அறிக்கையை சுட்டிக்காட்டி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ” கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் இந்த பட்டியலில் இந்தியா தொடர்ந்து பின் தங்கியே வருகிறது. 22. 4 கோடி இந்திய மக்கள் ஊட்டச்சத்துக்குறைபாட்டுடன் உள்ளதாக கருதப்படுகிறது.
* 19.3 சதவீத குழந்தைகள் வீணாகிறார்கள், 35.5 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். இந்துத்துவா, ஹிந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது ஆகியவை பசிக்கு மருந்தல்ல.
* உண்மையான பிரச்னைகளுக்கு பிரதமர் மோடி எப்போது தீர்வு காணப்போகிறார்?” என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆம் ஆத்மியும் விமர்சனம்
அதே போன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, “பாஜக 5 டிரில்லியன் பொருளாதாரத்தை உருவாக்கப் போவதாக பேசுகிறது. ஆனால் பட்டினிக் குறியீட்டில் நாம் 107 வது இடத்தில் இருக்கிறோம். நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகள் கூட இரண்டு வேளை ரொட்டி வழங்குவதில் நம்மை விட சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்வி வழங்காமல் இந்தியா நம்பர் 1 ஆக முடியாது” எனக் கூறி உள்ளார்.
தமிழ்நாட்டில் உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா?

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடந்த 4 மாதங்களாகக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உண்மை நிலை என்ன? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
சென்னை மழைநீர் வடிகால் பணிகள்… எந்தெந்த ஏரியாவில் என்ன நிலவரம்?! | முழுமையான போட்டோ அப்டேட்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், விரைவிலேயே பணிகள் முடிவடைந்துவிடும் என அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடி விசிட் செய்ததில், மழை நீர் வடிகால் பணிகளின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை அறிய முடிந்தது.
அவற்றை விளக்கும், புகைப்படத் தொகுப்பைக் காண இங்கே க்ளிக் செய்யவும்…
மீண்டும் ஒலித்த ‘இந்தி தெரியாது போடா!’

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாணவரணி, இளைஞரணி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி, இளைஞரணி சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்…
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
கிசுகிசு: மூத்த அமைச்சரைத் திட்டித்தீர்க்கும் முதன்மையானவர்!

பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், டெல்லி தொடர்புகளை மிகச் சரியாக வைத்திருப்பவர் ‘மை’ யான புள்ளி. துணிவானவர் பக்கமிருந்த அவர் திடீரென பணிவானவர் பக்கம் பாய, டெல்லியின் மூவ் தெரிந்துதான் அவர் போனாரோ என யோசிக்கிறார்கள் இலைக் கட்சியின் நிர்வாகிகள் பலரும்.
ஒருசிலர் இது குறித்து ரகசியமாக போன் போட்டுக் கேட்க, அதைக் கொஞ்சம்கூட மறுக்காமல், ‘இப்பவே இந்தப் பக்கம் வந்துடுங்க. தேர்தல் ஆணையம் பணிவானவரைத்தான் அங்கீகாரம் பண்ணப்போகுது’ என அடித்துவிடுகிறாராம் அந்த ‘மை’யான புள்ளி.
கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள மேலும் பல அரசியல் சீக்ரெட்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
பணியில் ‘டார்ச்சர்’, நெருக்கடி… புதிய வேலைக்கு மாறும் முன் என்ன செய்யவேண்டும்?

ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறுவதற்கும், வேலையை விட்டுவிட்டு பிசினஸ் செய்வதற்கும் முன்கூட்டியே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றி சரியாகத் தெரிந்து வைத்திருந்தால், புதிய வேலையில் அல்லது பிசினஸில் தோல்வியைச் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.
அப்படி மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை காம்ஃபை சொல்யூஷன் ஹெச்.ஆர் ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கே.சுகுமாரன் சொல்கிறார். அதைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…
வலையில் விழுந்த பெரும் புள்ளிகள்? – ஒடிசா அரசியலை கலங்கடித்த இளம்பெண்!

ஒடிசாவின் வறட்சி மண்டலம் எனப் பெயர்பெற்ற கலஹண்டி மாவட்டத்தின் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா நாக் (26). ஆனால், இப்போது இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், சொகுசு கார்கள், நான்கு விலை உயர்ந்த நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு அரண்மனை போன்ற வீட்டை வாங்கி குட்டி சாம்ராஜ்யத்தை நடந்தி வந்திருக்கிறார்.
இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு காவல்துறை விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
ஒடிசா அரசியலில் புயலை ஏற்படுத்தி உள்ள இந்த செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
“எம்.பி பதவியை இளையராஜா தூக்கி எறிந்திருக்க வேண்டும்!”- சீமான் ஆவேசம்!

குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை பழங்காநத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நனைந்தபடி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
“அவசரப்பட்டு ஐ.பி.எஸ் வேலையை விட்டுட்டு வந்துட்டாரு அண்ணாமலை. இரண்டு வருடத்தில் அண்ணாமலையை விரட்டிவிடுவார்கள். அதற்கு பிறகு என்ன ஆவார் என்பது தெரியவில்லை. சூத்திரன் என்பதால் கோயிலில் நுழையவிடவில்லை, ஈடு இணையற்ற இசைஞானி இளையராஜா…”
சீமானின் ஆவேச பேச்சை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…