தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்படும். அதன்பிறகு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்வர். இந்த கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்படவுள்ளன. இதுதவிர புதிய அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன. ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதற்கிடையில் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மிகவும் கவனம் ஏற்படுத்திய விஷயம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை. ஏனெனில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்தே
நீக்கிவிட்டார். அதற்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை தங்களுக்கு ஒதுக்கக் கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பும் மாறி மாறி சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில் அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சபாநாயகர் அப்பாவு உட்பட 17 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி பெயர் காணப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் பெயர் இருக்க வேண்டிய இடத்தில்
பெயர் உள்ளது. இதன்மூலம் ஏற்கனவே எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் சபாநாயகர் அப்பாவு மாற்றம் செய்யவில்லை என்று தெரிகிறது.