சட்டீஸ்கர் மாநில துணை சபாநாயகர் மாரடைப்பால் சாவு

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில துணை சபாநாயகர் மனோஜ் சிங் மாண்டவி நேற்று காலமானார். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சட்டீஸ்கர் மாநிலத்தில்,  சட்டப்பேரவை துணை சபாநாயகராக இருந்தவர் மனோஜ் சிங் மாண்டவி (58) .இவர் நேற்று முன்தினம் கங்கர் மாவட்டம், சரமா பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தம்தாரி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
 அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலையில்  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காலமான மனோஜ் சிங் 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். பஸ்தார்  பகுதியில்  உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த முக்கிய தலைவராக விளங்கிய மனோஜ் சிங் கடந்த 2000-2003 வரை அஜித் ஜோகி  அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்துள்ளார். சட்டமன்ற சபாநாயகர் சரண்தாஸ் மகந்த், முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் காங்கிரஸ்,பாஜ உள்ளிட்ட கட்சி தலைவர்கள்  மனோஜ் சிங் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.