சர்வதேச இலத்திரனியல் கழிவு தினம்

இம்முறை சர்வதேச இலத்திரனியல் கழிவு தினம் , ‘எவ்வளவு தான் சிறிதாக இருந்தாலும், அவை அனைத்தையும் மீள்சுழற்சி செய்க’ சர்வதேச மின்கழிவு என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படுகிறது.

 சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவின் தலைமையில்  இலத்திரனியல் கழிவுகளை சேகரித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் பதிவு செய்த மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பவர்களின் ஊடாக அழிக்கும் நிகழ்வு சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்தியர் அனில் ஜாசிங்க உரையாற்றுகையில்:
ஓவ்வொரு வருடமும் ஒக்டோபர் 14ஆம் திகதி சர்வதேச இலத்திரனியல் கழிவு தினமாக 2018ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரை மையமாக வைத்து உலகம் முழுவதும் காணப்படும் மின்இலத்திரனியல் உற்பத்தியில்; ஈடுபடும் 43 நிறுவனங்களின் பிரதிநிதிகளினால் மின் கழிவுகளை மீழ்சுழற்சி செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்டது.

உபயோகத்தின் பின்னர் அகற்றக் கூடிய இலத்திரனியல் மற்றும் மின் கழிவுகளான கணனி, அச்சு இயந்திரம், புகைப்பட பிரதி இயந்திரம், கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றை அகற்ற முடியும். அத்துடன் எதிர்காலத்தில் அரச அலுவலகங்களை முதன்மைப் படுத்திய இந்நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கருத்துத் தெரிவித்த வைத்தியர் அனில் ஜாசிங்க: 2019ஆம் ஆண்டில் உலகம் சிறிய மின் இலத்திரனியல் உபகரணங்கள் 22மில்லியன் டொன், அவற்றில்; 40சதவீதம் கழிவாகும். அவ்வாறே 2030 ஆம் ஆண்டாகும் போது இலத்திரனியல் மின்உபகரணங்கள் 29மில்லியன் டொன்னாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்புகளுக்கு இணங்க 2021 ஆம் ஆண்டு ஒவ்வொரு நபரினாலும் சாதாரணமாக இலத்திரனியல் உபகரணங்கள் 7.6கிலோ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறாயின் உலகம்; பூராவும் 2021இல் மாத்திரம் 57.4மில்லியன் இலத்திரனியல் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதில் சேதமடைந்த மற்றும் பெறுமதியான பொருட்களின் சேர்மானம் இந்;த இலத்திரனியல் உபகரணங்களில் 17.4சதவீதம் மாத்திரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.