செம்மொழி நிறுவனம் அசத்தல் திட்டம்… பார்வையற்றோரும் விரைவில் திருக்குறள் படிக்கலாம்!

செம்மொழி நிறுவனத்தின் வளர்ச்சிப் பணியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புத் திட்டம் அமைந்துள்ளது.

செம்மொழி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளுள் பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 41 தமிழ்ச் செவ்வியல் நூல்கள் உட்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளதாக இந்நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, .சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, .முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, .பட்டினப்பாலை, மலைபடுகடாம், நாவடியார், .நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணைஎழுபது, திணைமொழிஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, .பழமொழி, சிறுபஞ்சமூலம், .திருக்குறன், .திரிகடும், .ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, .ஏலாதி, கைந்நிலை, .சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள், .நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை

நம்பியகப்பொருள் ஆகிய 46 நூல்களும் பிரெய்லி வடிவில் விரைவில் வெளியிட உள்ளன.

இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றிருக்கும். கடந்த மார்ச்சு மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம் வரும் டிசம்பர் மாதம் நிறைவுற்றவுடன் புத்தகங்கள் அச்சிடப்படும். அனைத்து நூல்களும் பார்வை மாற்றுத்நிறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று இரா. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், திருக்குறள், சங்க தமிழ் இலக்கிய நூல்களை பிரெய்லி முறையில் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துவரும் தமிழ் வளர்ச்சி துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.