காபூல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொது இடத்தில் கல்லெறிந்து கொல்ல திட்டமிட்டு இருந்ததை அறிந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.
உயர் கல்வி கற்க, பொது இடங்களில் தனியாக நடமாட, வேலைக்குச் செல்ல, காதல் திருமணம் செய்ய தடை விதித்தனர்.இதனால் லட்சக்கணக்கான பெண்கள் உயர் கல்வியை இழந்தனர். ஏராளமானோர் வேலையை இழந்து தவிக்கின்றனர். வேலை இழந்த 1.8 கோடி பெண்களில் 80 சதவீதத்தினர் ஊடகங்களில் பணியாற்றியவர்கள்.
இந்நிலையில், காபூல் நகரில் வசித்த ஒரு இளம்பெண் தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இருவரும் மாகாணம், மாகாணமாக தப்பி ஓடிக் கொண்டிருந்தனர். கடந்த 13ம் தேதி அந்த இளைஞரைப் பிடித்த தலிபான் -பயங்கரவாதிகள் அவரை துாக்கிலிட்டு கொலை செய்தனர்.
இளம்பெண்ணை பிடித்து, பொது இடத்தில்கல்லால் எறிந்து கொல்லவும் திட்டமிட்டனர். இதை அறிந்த அந்தப் பெண், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement