புதுடில்லி: குஜராத்தில் பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அப்பீல் வழக்கில் குற்றவாளிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் 2002ம் ஆண்டு ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதை தொடர்ந்து கலவரம் பரவியது போது, ராந்திக்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த 12 பேர், அங்கிருந்தவர்களை கொலை செய்து விட்டு, 5 மாத கர்ப்பிணி பில்க்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, 12 பேரை கைது செய்தனர். ஒருவர் இறந்துவிட்டார். மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த வழக்கில் குற்றவாளிகளை நன்னடத்தை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவுக்கு மத்திய அரசு மற்றும் குஜராத் அரசு பதிலளிக்க வேண்டும் என
இன்று நடந்த விசாரணையில், சிறை கைதிகள், தண்டனை குறைப்பு கொள்கை அடிப்படையில் நன்னடத்தையின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக குஜராத் அரசு தெரிவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement