ஜெயலலிதா மரணம்: யாரெல்லாம் குற்றவாளிகள்? வெளியான அறிக்கை!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான 608 பக்கங்கள் அடங்கிய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 15 பக்கங்களுக்கும் மேலாக முடிவுகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், 2012ல் ஜெயலலிதா உடன்

மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் இடையில் சுமூக உறவு இல்லை.

ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறிவிட்டனர். ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

சசிகலாவை குற்றம்சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. சசிகலா, ஜெயலலிதாவின் தனிப்பட்ட மருத்துவர் கே.எஸ்.சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு உட்படுத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.