உலகநாயகன் கமல்ஹாசன் பல நடிகைகளுடன் உறவில் இருந்துள்ளார், 24 வயதில் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். சரிகாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தில் வாணியை பிரிந்தார், பின்னர் சிம்ரனுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் சரிகாவை பிரிந்தார். அதன்பின்னர் சமீபத்தில் கௌதமியுடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவருடனும் உறவை முறித்து கொண்டிருக்கிறார்.
நாகர்ஜுனா 1984ம் ஆண்டு லட்சுமி டகுபதியை திருமணம் செய்துகொண்டார், பின்னர் 1990ம் ஆண்டு இருவரும் உறவை முறித்துக்கொண்டனர். அதன்பின்னர் 1992ம் ஆண்டு நாகர்ஜுனா நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார்.
1994ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் நடிகை லலிதா குமரியை திருமணம் செய்துகொண்டார், திடீரென்று இவர்களது மகனின் இழப்பு இருவரிடையே சில மனக்கசப்புகளை ஏற்படுத்தியது. அதன்பின்னர் இருவரும் 2009ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர், 2010ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் போனி வர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
போனி கபூர் திருமணத்திற்கு முன்னரிலிருந்தே நடிகை ஸ்ரீதேவியை காதலித்து வந்தார், 1984ம் ஆண்டு மோனா கபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீதேவி, போனி கபூரால் கர்ப்பமாக இருந்த காரணத்தால் சில காலங்களிலேயே போனிகபூர் – மோனா கபூர் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதன்பின்னர் 1996ம் ஆண்டு போனி கபூர்-ஸ்ரீதேவி திருமணம் செய்துகொண்டனர்.
பிரபுதேவா 1995ம் ஆண்டில் ரம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார், பின்னர் 2010ல் பிரபு தேவா மற்றும் நயன்தாரா இருவரும் உறவில் இருந்து வந்தனர் இதனால் பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து வரை சென்றனர். பிரபுதேவா-நயன்தாரா திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் தங்களது உறவை முறித்துக்கொண்டனர்.