
விக்ரமுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்
பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள கடப்பாவில் இன்று நடைபெற இருக்கிறது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படங்களில் நடித்த மாளவிகா மோகனன் நடித்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதோடு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.