தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெள்ள நீர் கால்வாய் திட்டம் கிடப்பில் உள்ளதால் சுமார் 10,000 வீடுகளை மழைநீர் சூழும் அபாயம் நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளார். கலைஞர் முதலமைச்சராக இருந்த போது துத்ட்டுக்குடி ஆதிபராசக்தி நகர், முத்தம்மாள் காலனி போன்ற பகுதிகளில் வெல்ல நீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது. காட்டாற்று வெள்ளம் வரக்கூடிய ஓடைகள் தூர்வாரப்படாமல் உள்ளதாலும், சில ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், குடியேறுப்புகளை வெள்ளம் சொல்வது தொடர்கதையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.