குஜராத்தின் காந்திநகரில் 12வது பாதுகாப்பு தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

புதிய இந்தியாவின் சிறப்பான தோற்றத்தை, பாதுகாப்பு தளவாட கண்காட்சி வெளிப்படுத்துவதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்தி நகரில் 12வது பாதுகாப்பு தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்த அவர், தீசாவில் அமைக்கப்படும் விமானப்படையின் 52வது படைப்பிரிவு தளத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இதுவரை நடைபெற்றதிலேயே இக்கண்காட்சிதான் மிகப்பெரிய பாதுகாப்பு தளவாட கண்காட்சி என்றும், புதிய எதிர்காலம் தொடங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில், இக்கண்காட்சி உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

நேர்மறை எண்ணம் கொண்ட பல நாடுகள், இந்தியாவுடன் கை கோர்க்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, 2014ம் ஆண்டுக்கு பிறகு, 8 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் மோடி  தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.