சிக்னல் கோளாறு காரணமாக பாதியிலேயே ரயில் நின்ற நிலையில், சாமார்த்தியமாக செயல்பட்டு இரயிலை ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இன்று மதியம் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 750 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
இரயில் ஆனது செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள பொத்தேரி மற்றும் காட்டாங்குளத்தூர் இடையே சென்று கொண்டிருக்கும் பொழுது ரயில்வே சிக்னல் மின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு சுதாரித்த ரயில்வே ஓட்டுநர் உடனடியாக இரயிலை நிறுத்தி ரயில்வேத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனை எடுத்து தகவல் அறிந்து இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட மின் கோளாறை சீர் செய்தனர். இதனை அடுத்து சுமார் 20 நிமிடத்திற்கு மேல் தாமதமாக இரயில் புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக கால தாமதமாக செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.