தமிழ் திரை உலகில் பிரபல இசையமைப்பாளராக மட்டுமின்றி பிரபல நடிகராகவும் வலம் வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் விவேக் இயக்கத்தில் உருவாகி வரும் 13 என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இதில் இயக்குனர் கௌதம் மேனன் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் இதுவரை நடிக்காத ஜானரில் நடித்துள்ளார். இப்படம் சற்று வித்தியாசமாகவும், திரில்லராகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், 13 படத்தின் டீசர் நாளை மாலை 6:07 மணி அளவில் வெளியாகும் என்ற அதிகாரவபூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Teaser of my next film an investigative horror flick #13TheMovie with @menongautham will be out tomorrow 6.07PM.@director_vivekk @Madras_Studios @Music_Siddhu @dopmoovendar @jfc_castro @aadhya_prasad @bt_bhavya @adithya_kathir @DoneChannel1 @thinkmusicindia @MadrasDiariesMD pic.twitter.com/mOyESRmTQf
— G.V.Prakash Kumar (@gvprakash) October 19, 2022
மேலும் இந்த படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.