நாடு முழுவதும் 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’! 22ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் 10லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தை பிரதமர் மோடி, வரும்  22ந்தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த  திட்டத்தின்கீழ் முதல்கட்டகமாக  அரசின் பல்வேறு நிலைகளில் 75 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

10லட்சம் பேருக்கு வேலைவாயப்பு வழங்கும் திட்டமான ‘ரோஸ்கர் மேளா’-வை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். ரோஸ்கர் மேளாவை பிரதமர் மோடி காணொளி மூலமாக தொடங்கி வைப்பார் என்றும், விழாவில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,” “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும், குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் பிரதமரின் செயல்திட்டங்களில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னோடி திட்டமாக இருக்கும். பிரதமரின் வழிகாட்டுதலின்படி, தற்போதுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் செயல்பட்டு வருகின்றன” என குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், இந்திய அரசின் 38 அமைச்சகங்கள்/துறைகளில் சேர்க்கப்படுகிறார்கள். நியமனம் செய்யப்பட்டவர்கள் அரசின் பல்வேறு குரூப்களில் இணைந்து கொள்வார்கள். குரூப் – ஏ, குரூப் – பி (அரசிதழில் வெளியிடப்பட்டது), குரூப் – பி (அரசிதழில் வெளியிடப்படாது) மற்றும் குரூப் – சி. பணியிடங்களில் மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், உதவி ஆய்வாளர், கான்ஸ்டபிள், எல்டிசி, ஸ்டெனோ, பிஏ, வருமான வரி ஆய்வாளர்கள், எம்.டி.எஸ். போன்றவைகள் இதில் அடங்கும்.

இந்த ஆட்சேர்ப்புகள் மிஷன் முறையில் அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் தாங்களாகவோ அல்லது UPSC, SSC, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்ற ஆட்சேர்ப்பு முகமைகள் மூலமாகவோ ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவான ஆட்சேர்ப்புக்காக, தேர்வு செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டு பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் இவை நடைபெற்றுள்ளது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்று வதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.   குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்று பிரதமர் அலவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டு நலனில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் பொறுப்பை அவர் நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு துறைகளிலும் காலியாக இருக்கும் மற்றும் ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார். இந்த புதிய வேலை வாய்ப்புகள் அனைத்தும் நாட்டின் 38 அமைச்சக மற்றும் துறைகளில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்புவதன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோடியின் வழிகாட்டுதலின்படி, அனைத்து அமைச்சகங்களும் துறைகளும் தற்போதுள்ள காலி பணியிடங்களை “மிஷன் முறையில்” நிரப்புவதற்கு பணிபுரிந்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த பணி நியமனம், 75ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.