வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் நோயாளிக்கு பிளாஸ்மா ஏற்றுவதற்கு பதிலாக சாத்துக்குடி ‛ஜூஸ்’ ஏற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் டெங்கு பாதித்த நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரத்த பிளேட்லெட்டுகள் குறைந்ததால், உடனடியாக ரத்த பிளாஸ்மா தேவைப்பட்டது.
இதனையடுத்து, உள்ளூர் ரத்த வங்கியை நாடியுள்ளனர். ஆனால் ரத்த வங்கி பிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி ‛ஜூஸ்’ நிரப்பி கொடுத்துள்ளது. பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால் பிளாஸ்மா என நம்பி மருத்துவமனை நிர்வாகமும் நோயாளிக்கு அந்த ஜூஸை ஏற்றியுள்ளது.

இதில், இதில் நோயாளி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் ரத்த வங்கி கொடுத்த பேக்கிங்கில் பிளாஸ்மா என்று எழுதப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக உ.பி., துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறுகையில், ‛டெங்கு நோயாளிக்கு போலி பிளாஸ்மா விநியோகிப்பது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றம் கண்டறியப்பட்டால் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement